Friday, April 11, 2008

insightful


தாத்தாவின் மூக்குக் கண்ணாடிகை தவறி விழும் முன் சொன்னேன்rttr 'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரைபோர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றேவாழ்த்து அட்டையில் எழுதினேன்'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்அவள் விரல் பிடித்தே எழுதுவேன்'I Love You' என்று …!

இரவில் …வீட்டிற்கு செல்லும் வழியில் - காலைகுத்தியது முள் …'அம்மா' என்று
அலறினேன்குத்தியது முள்ளில்லை - என்னைகுத்திக் காட்டியது - என் தமிழ்

நன்றி....

WOW what a wonderful tamil poem, i dont know, who the author is, anyhow my appreciation to the author of this beautiful and meaningful poem...

Courtesy to Chandru for forwarding this peom.

No comments: